ஆப்நகரம்

சென்னை: கிண்டி-வேளச்சேரி சாலை முடக்கம்... திமுக போராட்ட எதிரொலி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

Samayam Tamil 24 Oct 2020, 11:39 am
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Samayam Tamil திமுக போராட்டம்


மருத்துவப் படிப்பில் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்தும் ஆளுநருக்கு அடங்கிப்போவதாக தமிழக அரசைக் கண்டித்தும், சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு இன்று (அக். 24) திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

இன்று காலை 10 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொன்முடி, கனிமொழி எம்.பி., மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இதன் விளைவாக கிண்டி வேளச்சேரி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அடுத்த செய்தி