ஆப்நகரம்

குட்கா ஊழல் வழக்கு: டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது!!

குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள டிஜிபி ராஜேந்திரன், பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, போராட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 27 Apr 2018, 11:36 am
குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள டிஜிபி ராஜேந்திரன், பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, போராட்டம் நடத்திய திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil குட்கா ஊழல் வழக்கு: டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது!!
குட்கா ஊழல் வழக்கு: டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது!!


தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை விற்பனை செய்வதற்காக டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கியுள்ளதாக புகார் எழுந்தது.

டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர்


இந்த புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன், குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க நேற்று உத்தரவிட்டது.

குட்கா ஊழல் வழக்கு: டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர் கைது!!


இதைத்தொடர்ந்து, இந்த தீர்ப்பு குறித்து பதிலளித்த திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இருப்பதை வரவேற்பதாகவும், வழக்கு நியாயப்படி நடைபெற வழக்கில் தொடர்புடைய டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை பதவியிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இன்று காலை திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தலைமையில் திமுகவினர் சென்னை சிட்டி சென்டரில் இருந்து டிஜிபி அலுவலகத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். பின்னர், டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்துள்ளனர். இதனிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தப்படலாம் என்பதால், அங்கு தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி