ஆப்நகரம்

கொரோனா அலெர்ட் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்குப் பறந்த ஆர்டர்!

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Sep 2021, 5:58 pm
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு(டெக் மகேந்திர) தனியார் நிறுவனம் சார்பாக ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரபல சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
Samayam Tamil கொரோனா அலெர்ட் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்குப் பறந்த ஆர்டர்!


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்:
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறோம். கொரோனா நோய் தடுப்பு பணியில் தனியார் நிறுவனங்கள் அரசுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது டெக் மகேந்திர நிறுவனம் சார்பாக மூன்று ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளனர். கையிருப்பு குறைவாகவிருந்ததன் காரணமாகவே கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசி மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோயினால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 1. 1 சதவீதமாக உள்ளது. நாள்தோறும் கொரோனா பரிசோதனை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு அளித்துள்ளோம்.

கடந்த ஆட்சியெல்லாம் சும்மா; திமுக அரசுக்கு விவரம் ஜாஸ்தி!
உள்ளாட்சித் தேர்தலுக்காகக் கூட்டம் கூடுவதைக் கடந்து எந்த ஒரு காரணத்திற்காகவும் அரசு நெறிமுறைகளைக் கடந்து கூட்டம் கூடினால் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்தாத நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி