ஆப்நகரம்

Chennai Rains: சென்னையில் அதிகாலை முதல் புரட்டி எடுத்து வரும் மழை!

தலைநகர் சென்னையில் இன்று காலை முதல் நல்ல மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Samayam Tamil 21 Nov 2019, 9:01 am
தலைநகர் சென்னையில் இன்று காலை முதல் நல்ல மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
Samayam Tamil heavy rain in several parts of chennai today morning
Chennai Rains: சென்னையில் அதிகாலை முதல் புரட்டி எடுத்து வரும் மழை!


வானிலை அறிவிப்பு

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு

இதற்கு காற்றழுத்த தாழ்வு நிலை காரணம் ஆகும். குறிப்பாக தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

சென்னையில் மழை

இந்த சூழலில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

பல்வேறு இடங்களில் கனமழை

இந்நிலையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம், பல்லாவரம், கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை?

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த சூழலில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி