ஆப்நகரம்

சென்னையில் கனமழை: பொது மக்கள் மகிழ்ச்சி!

தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Samayam Tamil 3 Jul 2020, 5:34 pm
தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டைப் பகுதியில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil சென்னை மழை
சென்னை மழை


தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

காவலர் முத்துராஜ் விரைவில் பிடிபடுவார், இன்னும் சிலருக்கு ஸ்கெட்ச் இருக்கு - சிபிசிஐடி

இந்த நிலையில், சென்னை அருகே பெருங்களத்தூர், வண்டலூர், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், நாவலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேலும், பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு குளிச்சியான சூழல் நிலவுகிறது. மழை காரணமாக வெப்பம் தனிந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி