ஆப்நகரம்

ஐஐடி மெட்ராஸுக்கு ரூ.55.3 கோடி நிதியளித்த முன்னாள் மாணவர்கள்!!

சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸுக்கு அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் ரூ.55.3 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்

Samayam Tamil 31 Jan 2018, 3:47 pm
சென்னை: சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸுக்கு அக்கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் ரூ.55.3 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.
Samayam Tamil iit madras bags record rs 55 crore in alumni funds in 2016 17
ஐஐடி மெட்ராஸுக்கு ரூ.55.3 கோடி நிதியளித்த முன்னாள் மாணவர்கள்!!


இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமாக திகழ்வது ஐஐடி மெட்ராஸ். இதில் பயின்ற மாணவர்கள் பலரும் உலகின் பல்வேறு பகுதிகளில் மிகப்பெரிய பதவிகளில் உள்ளனர்.

இந்நிலையில், இக்கல்லூரியின் மேம்பாட்டிற்காக முன்னாள் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் நிதிதிரட்ட கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, ஆண்டுதோறும் மாணவர்களிடமிருந்தும் மற்ற அமைப்ப்புகளிடமிருந்தும் நிதி பெறப்பட்டு வருகிறது.

இதில், கடந்த மூன்று கல்வியாண்டுகளில் முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து அதிகப்படியாக நிதியுதவி செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் முன்னாள் மாணவர்கள் சுமார் 55.3 கோடி ரூபாயை ஐஐடி மெட்ராஸுக்கு நிதியாக அளித்துள்ளனர். மேலும், வரும் 2020 ஆம் ஆண்டில் ரூ.500 கோடி நிதியுதவி வரை பெற திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி