ஆப்நகரம்

பற்ற வைத்த ஓபிஎஸ்.. பதறிய பாஜக; பரபரப்பு கிளப்பும் பின்னணி தகவல்!

அதிமுக உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் நீங்க இறங்குறீங்களா? நானே இறங்கவா? என ஓ.பன்னீர்செல்வம் கேட்டு பாஜக மேலிடத்தை பதற வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 23 Jun 2022, 5:33 pm
அதிமுக உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சென்னை வானகரத்தில் இருக்கும், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil ஓபிஎஸ்
ஓபிஎஸ்


முன்னதாக அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு பொதுக்குழு கூட்டம் நடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தது.



அதே சமயம் எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மீது மட்டும் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் புதிய தீர்மானங்கள் எதுவும் எடுக்க கூடாது எனவும் நீதிமன்றம் கடிவாளம் போட்டது.

காலை வாரிய கட்சி; காற்றை புடுங்கிய நிர்வாகிகள்; காவல் தெய்வம் ஓபிஎஸ்சின் திக் திக் திக் நிமிடங்கள்!

இது, ஓபிஎஸ்சுக்கு சாதகமான தீர்ப்பாக தோன்றினாலும் கட்சிக்குள் போதிய ஆதரவு இல்லாததால், பொதுக்குழு கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஓபிஎஸ் சந்திக்க நேர்ந்தது.

சொந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களே வெளியே போக சொல்லி கோஷமிட்டதால் கசப்பான மனநிலையுடன் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

இந்த களேபரத்துக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையை ஏற்பார் எனவும், அடுத்த பொதுக்குழுவில் இதற்கான நடவடிக்கை செயல் வடிவம் பெறும் என்றும், அதிமுக முன்னணி நிர்வாகிகள் மேடையிலேயே உறுதி தந்து கூட்டத்தை முடித்து வைத்தனர்.

இடியை இறக்கிய ஓபிஎஸ்; எடப்பாடி அன்கோ கப்சிப்!

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டுக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திடீரென வருகை தந்தார்.

அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். இதனை தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது, நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அதிமுக ஆதரவளிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டாலும் இதன் பின்னணியில் ஓபிஎஸ் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படியும் ரசிகர் கூட்டமா?; நெகிழ்ந்து போன நடிகர் விஜய்!

அதாவது ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு விவகாரங்களில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலேயே ஓபிஎஸ் இருந்து வந்தார். இதன் காரணமாக ஓபிஎஸ் மீது பாஜக தனது கடைக்கண் பார்வையை செலுத்தி துணை முதல்வர் பதவியை பெற்று கொடுத்தது.

இந்நிலையில் பாஜக உத்தரவையும் மீறி எடப்பாடி நகர்த்தும் காய்கள் ஓபிஎஸ்சுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மிகவும் விரக்தி அடைந்த ஓபிஎஸ் உடனே பாஜக மேலிடத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ‘நீங்கள் சொன்ன உத்தரவாதத்தை கேட்டு தான் நான் இவ்வளவு காலமும் ஒத்துழைத்து வந்தேன். தற்போது, என்னையே ஓரங்கட்டி வெளியேற்ற நினைக்கும் எடப்பாடியிடம் பேசி எனக்கு நீதி பெற்று கொடுங்கள்’ என்று ஓ.பி.எஸ் கேட்டதாகவும், இதன் தொடர்ச்சியாகவே அண்ணாமலை இந்த விவகாரத்தில் இறங்கியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி