ஆப்நகரம்

சென்னை மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

அலைமோதும் மக்கள் கூட்டம் காரணமாக, சென்னை மெரீனா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் அனைத்து விதமான போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

TOI Contributor 19 Jan 2017, 9:09 pm
அலைமோதும் மக்கள் கூட்டம் காரணமாக, சென்னை மெரீனா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் அனைத்து விதமான போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil jallikattu protest in peak vehicle transport stopped in marina beach road
சென்னை மெரீனா கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!


கடற்கரை வழியாகச் செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டு வருவதாக, போக்குவரத்து காவலர்கள் தெரிவித்தனர்.

மெரீனா கடற்கரையில் நேரம் செல்லச் செல்ல போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது. தற்போதைய நிலையில், அங்கு கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தொலைவுக்கு, காமராஜர் சாலையின் இருபுறமும் முகாமிட்டுள்ள போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டு வருகின்றனர்.

சுமார் 2 லட்சத்திற்கும் மேலானோர் மெரீனாவில் திரண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், உறுதியான விவரம் கிடைக்கப் பெறவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்குப் போதிய கழிவறை வசதி கிடைக்காமல், அவதிப்படுவதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jallikattu protest in peak: Vehicle transport stopped in Marina beach road

அடுத்த செய்தி