ஆப்நகரம்

இந்தியாவுடன் இணைந்து செயல்பட சென்னை வந்தது ஜப்பான் கடற்படை!

இந்திய கடற்படையின் சார்பாக நடைபெறும் தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகளில் பங்குகொள்ள ஜப்பான் கடற்படை சென்னை வந்துள்ளது

Samayam Tamil 12 Jan 2018, 11:55 am
இந்திய கடற்படையின் சார்பாக நடைபெறும் தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகளில் பங்குகொள்ள ஜப்பான் கடற்படை சென்னை வந்துள்ளது.
Samayam Tamil japan coast guard ship tsugaru to take part in maritime exercise off chennai coast
இந்தியாவுடன் இணைந்து செயல்பட சென்னை வந்தது ஜப்பான் கடற்படை!


இந்தியாவின் கடற்படை சார்பாக ஆண்டுதோறும் தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்க ஜப்பானைச் சேர்ந்த கடற்படைக் கப்பலான டிசகாரு சென்னை துறைமுகத்திற்கு வந்துள்ளது.

ஜனவரி 12 முதல் 18 வரை இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்தில் இருக்கும் எனவும், ஜனவரி 17 ஆம் தேதி இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருகையில் ஜப்பான் குழுவினர் சென்னையில் உள்ள முக்கிய கலாச்சாரப் பகுதிகளை பார்வையிடுவார்கள் எனவும், ஜப்பான் குழுவினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நட்பு ரீதியான வாலிபால் போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி இரு நாட்டிற்கும் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி