ஆப்நகரம்

சென்னை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் தங்க மோதிரம் பரிசு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த 14 பெண் குழந்தைகள் மற்றும் 13 ஆண் குழந்தைகள் என மொத்தம் 27 குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் பரிசு.

Samayam Tamil 26 Feb 2021, 8:27 pm

ஹைலைட்ஸ்:

  • சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும், அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏற்கனவே தீர்மானம்...
  • அதிமுக அரசின் ஆட்சியில் திமுகவினரைத் தவிர மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்...
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சென்னை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் தங்க மோதிரம் பரிசு!
சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளன்று பிறந்த 14 பெண் குழந்தைகள் மற்றும் 13 ஆண் குழந்தைகள் என மொத்தம் 27 குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயகுமார் தங்க மோதிரம் அணிவித்து அக்குழந்தைகளின் தாய்மார்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:
அதிமுக அரசின் நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று பிறந்த 27 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தேவையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசின் அசாத்தியமான சாதனைகளையும், வரவேற்பு மிக்க திட்டங்களையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அதிமுக அரசின் ஆட்சியில் திமுகவினரைத் தவிர மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

9,10,11 ஆல்பாஸ் முடிவுக்கு எதிர்ப்பு... உடனடியாக திரும்பப்பெறுமா அரசு?

சசிகலா மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கும், அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏற்கனவே தீர்மானம் போடப்பட்டுள்ளது. இனி யார் என்ன சொன்னாலும் அதில் உடன்பாடு ஏற்படாது.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்திக் குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. விரைவில் மத்திய அரசு அதற்கான வழிவகைகளைச் செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி