ஆப்நகரம்

கருணாநிதி குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலாபுரம் இல்லம் வருகை

கருணாநிதி குடும்பத்தினரான செல்வி செல்வம், துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு உள்ளிட்டோர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர்.

Samayam Tamil 7 Aug 2018, 6:06 pm
கருணாநிதி குடும்பத்தினரான செல்வி செல்வம், துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு உள்ளிட்டோர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தனர்.
Samayam Tamil durga-stalin-cover-pic
கண்ணீருடன் கோபாலாபுரம் இல்லம் வந்த கருணாநிதி குடும்பத்தினர்


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரான திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மு.க. அழகரி, கனிமொழி உள்ளிட்டோர் பலர் இருந்தனர்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை மாலை 4.30 மணிக்கு கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதனை தொடர்ந்து திமுக தொண்டர்கள் பலர் கதறி அழத்தொடங்கினர்.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு பணிக்கு வர டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுக தொண்டர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட கருணாநிதி மகள் செல்வி செல்வம், மருமகள்கள் துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு உள்ளிட்டோர் கதறி அழுதபடி கோபாலபுரம் இல்லம் திரும்பினர்.

இதன் காரணமாக கருணாநிதி உடல்நிலை குறித்த மனநிலை பதற்றம் அடைந்துள்ளது. தொடர்ந்து கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு திமுக தொண்டர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

இதை கட்டுப்படுத்த அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனைக்கு அரசியல் கட்சி தலைவர்களின் வருகை அதிகரித்து வருகிறது.

வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இன்று மாலை முதல் நாளை வரை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி