ஆப்நகரம்

Karunanidhi Health: ”சவால்களை கடந்து மீண்டு வருவார் கருணாநிதி”- தலைவர்கள் நம்பிக்கை

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 6 Aug 2018, 8:26 pm
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Samayam Tamil karunanidhi_helath
கருணாநிதி உடல்நலம்- தலைவர்கள் கருத்து


வயது மூப்பின் காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது திமுக தொண்டர்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். காவேரி மருத்துவமனையில் இன்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த திராவிட கழக தலைவர் கீ. வீரமணி, போராளியான கருணாநிதி மீண்டு வருவார் என நம்பிக்கையுடன் காத்திருப்போம் என்று தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முத்தரசனும், இன்று நேரில் கருணாநிதியிடன் உடல்நிலையை விசாரித்தார். பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, வயது முதிர்வின் காரணமாக கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் அடைவதுமாக, பின்னடைவு ஏற்படுவதுமாக உள்ளது என கூறினார்.


சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் பேசும் போது, உடல்நிலையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை போராடி வென்று மீண்டு வருவார் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் , பல சவால்களை கடந்து சாதனை படைத்துள்ள கருணாநிதி உடல்நிலையில் ஏற்பட்டு சவால்களையும் கடந்து வருவார் என நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

மேலும், கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக தொண்டர்கள் கலக்கமடைய வேண்டாம். விபரீத முடிவுகளை பற்றி சிந்திக்காமல் கருணாநிதி உடல்நலத்துடன் திரும்ப நம்பிக்கையுடன் காத்திருப்போம் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான ஆலடி அருணா திமுக தொண்டர்கள் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்த கருணாநிதி உடல் நலம் குறித்து கேட்டறிந்த தேமுதிக-வின் சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஸ்டாலினிடம் பேசியதாகவும் கருணாநிதிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சைகளை அளித்து வருவதாகவும் அவர் கூறியதாக சுதீஷ் தெரிவித்தார்.

அடுத்த செய்தி