ஆப்நகரம்

காசிமேடு மார்கெட் அதிகாலை 3 மணி, யார் வரலாம் என்றும் கட்டுப்பாடு!

கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் சூழலில் காசிமேடு மீன் மார்கெட்டில் கூடிய கூட்டம் அதிகாரிகளை அச்சத்தில் ஆழ்த்தியது...

Samayam Tamil 22 Jul 2020, 2:10 pm
கொரோனா ஊரடங்கு தடைக்குப் பின் அரசு கொண்டு வந்த தளர்வு காரணமாக காசிமேடு மீன் மார்கெட் கடந்த 15ஆம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்கியது.
Samayam Tamil காசிமேடு மார்கெட் அதிகாலை 3 மணி, யார் வரலாம் என்றும் கட்டுப்பாடு!
காசிமேடு மார்கெட் அதிகாலை 3 மணி, யார் வரலாம் என்றும் கட்டுப்பாடு!


பல நாள் இடைவெளிக்குப் பின் தொடங்கிய இந்த விற்பனை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கொரோனா என்பதையெல்லாம் மறந்து எந்த இடைவெளியுமின்றி மீன் வாங்க ஆர்வத்துடன் மக்கள் கூடத் தொடங்கினர்.

இதன் உச்சமாகக் கடந்த வெள்ளி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூடினர். தரையே தெரியாதளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது. அளவுக்கு மீறிய கூட்டத்தையடுத்து அங்கு மீன் விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்தது.

இதற்கிடையே மீனவர்கள் மீன் விற்பனையை எந்தவித பிரச்சினையுமின்றி மேற்கொள்ள அரசு வழிவகை செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து பரிசீலித்த தமிழ்நாடு அரசு இப்போது சில வழிமுறைகளை உருவாக்கி, மீன் விற்பனையை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா: மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு பாதிப்பு!

இந்த அறிவிப்பை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார். அதன்படி, காசிமேடு மார்கெட்டில் மீன் விற்பனை செய்ய அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளை பொது மக்கள் மீன் வாங்க அனுமதி கிடையாது.

இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் காசிமேட்டில் கூட்டம் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகளும் அரசும் நம்புகிறது.

அடுத்த செய்தி