ஆப்நகரம்

சென்னையில் மார்பக புற்றுநோயை கண்டறிய பிரத்யேக அரசு மருத்துவமனை!

மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான பிரத்யேக அரசு மருத்துவமனை திறப்பு விழா ஜனவரி மாதம் 3ஆம் தேதி நடைபெறும் என்று சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Dec 2018, 2:35 pm
மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான பிரத்யேக அரசு மருத்துவமனை திறப்பு விழா ஜனவரி மாதம் 3ஆம் தேதி நடைபெறும் என்று சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 67282713


கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுரியில், மார்பக புற்று நோயை கண்டறிவதற்கான பிரத்யேக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்பேசியதாவது ’மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைஎன்பது விலை உயர்ந்த பரிசோதனையாக இருக்கிறது. மேலும் அதில் இருக்கும் வழிமுறைகள் மக்களை அச்சுருத்துவதாக உள்ளது.

இதனால் பெண்கள்மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனை செய்து கொள்வதில்லை. தற்போது மார்பக புற்றுநோய் கண்டறிவதற்கான பிரத்யேக மருத்துவமனை அரசால் தொடங்கப்பட உள்ளது. இதனால் முன்பே மார்பக புற்றுநோய் கண்டறிய முடியும். இதன்மூலம் பெண்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது.

இந்த ’பிங்’ மருத்துவமனையில் உள்ள கட்டமைப்புகளை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். 4 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 3டி டிஜிட்டல் மமோகிராம் ஸ்கிரீனிங் வசதி கொண்டகருவிகள் அமைக்கப்படுள்ளது. இதன்மூலம் 4 மில்லி மீட்டர் வரையுள்ள சிறிய புற்றுநோய் கட்டிகள்கூட கண்டறிய முடியும் என்று கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் வசந்தமணி தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர். அதேபோல் மார்பகத்தை மாற்றி அமைப்பது தொடர்பானசிகிச்சைகள் மற்றும் அறுவகை சிகிச்சைகள்ஸ்டான்லி மருத்துவக்கலூரியில் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி