ஆப்நகரம்

சார் பதிவாளர் அலுவலகமா? கட்சி அலுவலகமா?

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சார்பதிவாளர் அலுலவகம் கட்சி அலுவலகம் போல காட்சி அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 18 Feb 2019, 3:21 pm
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சார்பதிவாளர் அலுலவகம் கட்சி அலுவலகம் போல காட்சி அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil index


சென்னை தி நகர் சட்டமன்றத் தொகுதியில் கோடம்பாக்கம் சார்பதிவளார் அலுலவம் அமைந்துள்ளது. அரசு சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் திரளாக வந்து செல்லும் இந்த அலுவலகம் கட்சி அலுவலகம் போல செயல்பட்டு வருகிறது என அப்பகுதியினர் புகார் கூறுகிறார்கள்.

அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பி.சத்தியா இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவரது பெயருடன் வைக்கப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுலவகத்தின் பெயர் பலகை அதிமுகவின் விளம்பரப் பலகை போல உள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படம் பெரிதாக பெயர் பலகையில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சத்தியாவின் படமும் உள்ளது. மற்றொரு புறத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் படங்களும் உள்ளன.

தமிழ்நாடு அரசின் சின்னம் மிகச் சிறிய அளவில்தான் உள்ளது. சார்பதிவாளர் அலுலவகத்தின் கட்டிடமும் அதிமுக தங்கள் அடையாளமாகக் கருதும் பச்சை நிறத்தில் உள்ளது. இந்த அலுலவகத்தின் அருகே உள்ள நியாய விலை கடை பரிதாப நிலையில் உள்ளது.

அரசு அலுவலகத்தையே கட்சி அலுவலகம் போல வைத்திருக்கும் தி. நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சத்தியாவுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி