ஆப்நகரம்

கோயம்பேடு காய்கறி சந்தை நள்ளிரவு முதல் திறப்பு!

கோயம்பேடு காய்கறி சந்தை இன்று நள்ளிரவு முதல் திறக்கப்படுகிறது.

Samayam Tamil 27 Sep 2020, 12:52 pm
கொரோனா பொது முடக்கம் காரணமாக ஐந்து மாதங்கள் மூடப்பட்டிருந்த கோயம்பேடு மொத்த காய்கறி கடைகள் இன்று இரவு முதல் திறக்கப்படுகின்றன.
Samayam Tamil koyambedu market


சென்னையில் கொரோனா பரவலுக்கான முக்கிய காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை இருந்ததாக கூறி மே மாதம் 5 ஆம் தேதி மூடப்பட்டது.

இதனால் சந்தை திருமழிசை பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால் வியாபாரிகள் வழக்கமான வியாபாரத்தை இழந்தனர். தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அரசிடம் பல முறை கோரிக்கைகள் வைத்து சந்தையை மீண்டும் திறக்க கோரினர்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? அமைச்சர் அறிவிப்பு!

இந்நிலையில் கடந்த மாத இறுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் கோயம்பேடு சந்தை திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் கோயம்பேட்டில் காய்கறி சந்தை, மலர் சந்தை திறக்கப்படவுள்ளது. எனவே கடைகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

ஸ்டாலின், அழகிரியை சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருக்கு கொரோனா!

கடைகளுக்கு வருவோருக்கு உடல் வெப்ப சோதனை செய்யவும், கிருமி நாசினி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதி வாரம் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனி நபர்கள் இரு சக்கர வாகனங்களில் வர தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி