ஆப்நகரம்

மேற்கு வங்கம் டூ சென்னை... காதலனை தேடி வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

காதலனை தேடி மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை வந்த இளம்பெண்ணை மீட்ட போலீசார் அவரை காப்பகத்தில் ஒப்படைந்தனர்.

Samayam Tamil 22 Dec 2020, 11:18 pm
சென்னை, பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், சிவசங்கர் நகர், அண்ணா நெடுஞ்சாலையில் நீண்டநேரமாக மொழி தெரியாத இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார்.
Samayam Tamil மேற்கு வங்கம் டூ சென்னை
மேற்கு வங்கம் டூ சென்னை - காதலனை தேடி வந்த காதலி


புரியாத மொழி பேசி பல்வேறு நபர்களிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.இதனை கண்ட அவ்வழியே வந்த ஆட்டோ ஓட்டுநர் இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்று சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசாரின் விசாரணையில் அந்த பெண் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஜூம்மா(22) என்பது தெரிய வந்தது. இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளை பெற்று கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரு வருடம் முன்பு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

விருப்பமில்லாமல் திருமணம்... புதுமணப் பெண் எடுத்த விபரீத முடிவு!

இந்த நிலையில் ஹோப்பின் என்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த மற்றொரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இரு தினங்களுக்கு முன் ஜூம்மாவை செல்ஃபோன் தொடர்பு கொண்ட ஹோப்பின், 'சென்னையில் மேஸ்திரி வேலை செய்து வருவதாகவும், சென்னைக்கு வரும்படியும்' கூறியுள்ளார்.

காதலனின் வார்த்தையை நம்பி ரயில் ஏறி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்திறங்கிய அவர், ஆசை காதலனை செல்ஃபோனில் தொடர்பு கொண்டால், சுவிட்ச் ஆஃப் என வந்ததும் ஜூம்மா கடும் அதிர்ச்சியடைந்தார். இதனால் காதலனை தேடி ஏரியா ஏரியாவாக சுற்றி திரிந்துள்ளார்.

தொலைந்த பணம்... மனமுடைந்த இளைஞர் போதையில் தூக்கிட்டு தற்கொலை!

இந்த தகவல்களை அறிந்த போலீசார், அந்த இளம்பெண்ணை அனகாபுத்தூரில் உள்ள சாய் இல்லத்தில் ஒப்படைத்தனர். மோசடி காதலன் ஹோப்பினை சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் சங்கர் நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி