ஆப்நகரம்

ரௌடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்ட பகுதியில் மாஜிஸ்திரேட் ஆய்வு

ரௌடி ஆனந்தன் என்கவுண்டர் செய்யப்பட்ட மத்திய கைலாஷ் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி அருகே மாஜிஸ்திரேட் சாண்டில்யன் ஆய்வு மேற்கொண்டார்.

Samayam Tamil 4 Jul 2018, 11:44 am
ரௌடி ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்ட மத்திய கைலாஷ் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி அருகே மாஜிஸ்திரேட் சாண்டில்யன் ஆய்வு மேற்கொண்டார்.
Samayam Tamil investigation
ரௌடி ஆனந்தன் என்கவுன்டர் விவகாரம்: ஆய்வு தொடங்கியது


சென்னை ராயப்பேட்டையில் 6 பேர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபடுவதாக காவலர் ராஜவேலுவிற்கு வந்த தகவலை அடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு சென்று ரகளையில் ஈட்டுபட்டவர்களை எச்சரித்தார்.

இதில் ஆத்திரமடைந்த கும்பல் காவலர் ராஜவேலுவை தாக்கியது. அதேபகுதியை சேர்ந்த ஆனந்தன் அரிவாளால் தாக்க, படுகாயமடைந்த நிலையில் ராஜவேலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக ரௌடி ஆனந்தன் அவனது கூட்டாளிகள் ஜிந்தா, அஜித், வேல்முருகன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ரவுடி ஆனந்தன் தப்பிச்செல்ல முயற்சித்தாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஆனந்தனை என்கவுண்டர் செய்து சுட்டுக்கொன்றதாவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சைதாபேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் சாண்டில்யன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று என்கவுன்டர் செய்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

அடையாறு மத்திய கைலாஷ் கைலாஷ் பகுதியில் நடைபெற்ற ஆய்வின் போது, கோட்டூர்புரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர். அதை தொடர்ந்து அடுத்ததாக மாஜிஸ்திரேட் சாண்டில்யன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு செல்லவுள்ளார்.

அங்கு வைக்கப்பட்டுள்ள ரௌடி ஆனந்தனின் உடலை பார்வையிட்ட பின், ஆனந்தனின் மனைவி மற்றும் தாயிடம் தெரிவித்து விட்டு உடற்கூறு ஆய்விற்கு அவர் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை தொடர்பான தகவல்களை மாஜிஸ்திரேட் சாண்டில்யன் விரைவில் வெளியிடுவார் என தெரிகிறது.

அடுத்த செய்தி