ஆப்நகரம்

சென்னையில் கடலில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு

மெரினா கடற்கரைக்கு வடக்கே ஐஎன்எஸ் அடையார் பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி சிறுவனை காப்பாற்ற குதித்த இளைஞரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TNN 18 May 2017, 1:32 pm
சென்னை: மெரினா கடற்கரைக்கு வடக்கே ஐஎன்எஸ் அடையார் பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி சிறுவனை காப்பாற்ற குதித்த இளைஞரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil man tries to rescue boy 15 both drown
சென்னையில் கடலில் மூழ்கி 2 பேர் உயிரிழப்பு


இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கும், கடற்படைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அவர்கள், நீரில் மூழ்கியவர்களை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மணிமாறன்(20) மற்றும் வேலூரைச் சேர்ந்த பள்ளி மாணவர் தினேஷ் குமார்(15) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தினேஷ் கடலில் குளித்தபோது, ராட்சத அலையால் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்து, அவரை காப்பாற்ற கடலில் குதித்த மணிமாறனும் நீரில் மூழ்கினார்' என்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு அறிக்கைப்படி, சுமார் 41 பேர் மெரினா கடலில் மூழ்கி உயிரிழந்ததாக அண்ணா சதுக்க காவல்துறைக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். போதிய கண்காணிப்பு, பாதுகாப்பு இல்லாததே இதுபோன்ற துயர சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

A 15-year-old student and a 20-year-old man who tried to save him from drowning died in the sea near INS Adyar, just north of Marina Beach, on Wednesday.

அடுத்த செய்தி