ஆப்நகரம்

போலி நிறுவனங்களுக்கு அமைச்சர் செக்; ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்து நடவடிக்கை!

சென்னை எழிலகத்தில் வணிகவரித் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, ‘போலி நிறுவனங்களின் ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என கூறினார்.

Samayam Tamil 4 Aug 2021, 8:17 pm
சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூட்டரங்கில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் அமைச்சர் மூர்த்தி தலைமையில் வணிகவரித் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Samayam Tamil அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி


இந்த கூட்டத்தில் வணிக வரித்துறை ஆணையர் சித்திக் மற்றும் செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் பங்கேற்றனர். அதன் பிறகு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வனிகவரி மற்றும் பதிவுத்துறையின் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. வணிக வரித்துறையின் நுண்ணறிவு பிரிவின் தகவலின்படி 261 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு 1.43 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

போலி நிறுவனங்கள் பல செயல்படுவதையும் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கான ஜிஎஸ்டி உரிமம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இது போன்ற போலி நிறுவனங்கள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போலி நிறுவனங்கள் உருவாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலியான நிறுவனங்கள் மீது காவல் துறையின் ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை; பாஜ தலைவர் அண்ணாமலை பொளேர்!

வெளி மாநிலங்களில் இருந்து வந்த வாகனங்கள் சரியான வரி செலுத்தாததால் 39909 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தமாக 1.74 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் எடுத்த தவறான முடிவு?; சட்ட துறை அமைச்சர் வருத்தம்!

மாநிலங்களின் எல்லையில் கண்காணிக்கும் பறக்கும் படையின் எண்ணிக்கை 50லிருந்து 100 ஆக உயர்த்தப்பட உள்ளது. 24 மணி நேரமும் வெளிமாநிலங்களில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்களை கண்காணிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மூர்த்தி கூறினார்.

அடுத்த செய்தி