ஆப்நகரம்

மின்வாரியம் தனியார்மயமா? - அமைச்சர் சொல்வது இதுதான்!

மின்வாரியம் நிச்சயமாக தனியார்மயம் ஆக்கப்படாது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Nov 2020, 1:56 pm
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
Samayam Tamil கோப்பு படம்
அமைச்சர் தங்கமணி


நிவர் புயலால் பாதிக்கப்பட்ட 16 மாவட்டங்களில் மொத்தம் 5,484 பீடர்கள் உள்ளன. இதில் பாதுகாப்பு கருதி 2,250 பீடர்கள் நிறுத்தப்பட்டன. இதுவரை 1,317 பீடர்கள் சரிபார்த்து மின் இணை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 933 பீடர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.

சென்னையில் 90 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. மேடவாக்கம், பெரும்பாக்கம், தென்சென்னை பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. தண்ணீர் வடிந்தபின் அந்த பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படும்.

நிவர் புயலுக்கு கடலூர், விழுப்புரத்தில் சாய்ந்த மின்கம்பங்கள் எவ்வளவு?

நிவர் புயலால் மின்வாரியத்திற்கு 1.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 4 துணை மின் நிலையங்களில் ஆள் பற்றாக்குறை காரணமாக இடைக்கால நிவாரணமாக தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டபின் தனியாரிடம் இருந்து மீண்டும் மின்வாரியமே பெற்றுக்கொள்ளும். மின்வாரியம் நிச்சயமாக தனியார் மையம் ஆக்கப்படாது.

மாநகரில் பெய்துள்ள பருவமழை கம்மியா, அதிகமா?

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடத்திற்கு 10 ஆயிரம் நபர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்தன. அதனை எதிர்த்து தொழிற்சங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. வழக்கு விசாரணைக்கு பின்னர் பணியிடங்கள் நிச்சயமாக நிரப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

அடுத்த செய்தி