ஆப்நகரம்

அதை நாங்கதான் மொதல்ல சொன்னோம்...அமைச்சர் கிளைம்!

தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு (எம்பிபிஎஸ்) இடம் கிடைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் குறித்து மருத்துவ கலந்தாய்வின் முதல் நாளே முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Nov 2020, 11:08 pm
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
Samayam Tamil அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் செலுத்த முடியாமல் மருத்துவ படிப்பில் சேர முடியாத மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் வாய்ப்பளிக்க முயற்சி செய்யப்படும்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதற்கான சட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை தயாராக உள்ளது.

நிவர் புயல்... 15 ரயில்கள் ரத்து!

சிதம்பரம் அண்ணாமலை மருத்து கல்லூரி, ஈரோடு ஐ.ஆர்.டி கல்லூரி ஆகியவற்றில் உயர்கல்வித் துறையில் உள்ள நடைமுறைகள் காரணமாக அரசு கட்டணம் செலுத்தவதற்கு தாமதமாகி வருகிறது.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு (எம்பிபிஎஸ்) இடம் கிடைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் குறித்து மருத்துவ கலந்தாய்வின் முதல் நாளே முதல்வர் அறிவித்து வெளியிட்டார்.

'கஜா'வை போல தாக்குமா நிவர் புயல்? - என்ன சொல்கிறார் அமைச்சர்!

கடந்த 18 ஆம் தேதியே மருத்துவ கல்வி இயக்குநரகம் மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின்கீழ் தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என்று மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி