ஆப்நகரம்

முதல்வரின் சென்னை வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் விசிட்... ஏன்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி பசுமை வழி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Samayam Tamil 19 Oct 2020, 12:17 pm
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவையொட்டி பசுமை வழி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியல் களத்தில் அதிமுக்கியமான நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி வீட்டில் மு.க.ஸ்டாலின்


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், தனது சொண்ட ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து முதல்வர் துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் பலரும் சிலுவம்பாளையம் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிரீன் வேஸ் சாலையில் அமைந்துள்ள, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்குச் சென்றார்.

கருணாநிதிக்கு இடம் தர அரசு மறுத்துவிட்டதாக ஸ்டாலின் கூறுவது பொய்: எடப்பாடி சவால்


அங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் ஆறுதல் கூறியதுடன், அவரது தாயாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உடன் இருந்தார்.


இந்நிலையில், கலைஞர் இறப்பின்போது மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி பெறுவது தொடர்பாக ஸ்டாலின் திணறிய சமயத்தில் எடப்பாடி பழனிசாமி, என்ன விதமான உதவிகள் செய்தார் என்பதை நினைத்துப் பாருங்கள் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி