ஆப்நகரம்

சென்னைக்கு வந்த 1000 புதிய மருத்துவர்கள்: கொரோனா சிகிச்சை தீவிரம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் கூடுதலாக 1000 மருத்துவர்கள் இன்று முதல் ஈடுபடுதப்படவுள்ளனர்.

Samayam Tamil 5 Jun 2020, 11:24 am
கொரோனா பாதிப்பு சென்னையில் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள், கொரோனா சிறப்பு முகாம்கள் ஆகிய இடங்களிலும் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Samayam Tamil coronavirus treatment


வெண்டிலேட்டர்கள் பயன்படுத்த வேண்டியவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பல இடங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்கள் அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கூடுதலாக மருத்துவர்களை களமிறக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்தது. இந்நிலையில் பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு ஊரக நலப் பணிகள் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற இருந்தவர்களின் பட்டியலைத் தயார் செய்து வந்தது.

முதல்முறை இப்படியொரு அதிர்ச்சி; இந்தியாவை போட்டுத் தாக்கும் கோவிட்-19!

அதன்படி தயாரிக்கப்பட்ட 1000 பேருக்கு அதிகமான பட்டியலில் உள்ளவர்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்பாமல் சென்னை கொரோனா பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா: ஐந்தே நாள்களில் ஆறாயிரத்தை நெருங்கிய பாதிப்பு!

இந்த ஆயிரம் பேரும் இன்று முதல் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிக்கு சேர்ந்து தினமும் அறிக்கை கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து இரு மாதங்கள் இவர்கள் இந்தப் பணியினை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாதிப்பு அதிகமாவதற்கு ஏற்ப அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படாது என்பதுடன், ஏற்கெனவே அந்தப் பணிகளை மேற்கொண்டுள்ள மருத்துவர்களின் வேலைப் பளுவும் கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

அடுத்த செய்தி