ஆப்நகரம்

2000 ரூ எங்களுக்கு இல்லையா? சென்னை மக்கள் வேதனை!

சென்னையில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகையோ, பொருள்களோ வழங்கப்படவில்லை.

Samayam Tamil 5 Jun 2021, 11:16 am
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மேலும் நீட்டிக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
Samayam Tamil tn ration shops


இந்நிலையில் ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மே மாதம் 2000 ரூபாய் வழங்கியது, ஜூன் மாதம் 2000 ரூபாய் வழங்குவதுடன் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய இலவச தொகுப்பையும் வழங்குகிறது.
ஜூன் 14 வரை ஊரடங்கு: எதெற்கெல்லாம் அனுமதி? முழு விவரம்!
இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் ஏற்கெனவே நடைபெற்ற நிலையில் இன்று முதல் சென்னையில் பல இடங்களில் விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

இதனால் மக்கள் காலை முதலே ரேஷன் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். ஆனால் அங்கு சென்ற அவர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மக்களுக்கு வழங்க வேண்டிய 2000 ரூபாய் பணமோ, மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்போ இன்னும் கடைகளுக்கு வரவில்லை என ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொடரும் ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள், தளர்வுகள்?பணமும், பொருள்களும் வந்தபின் வந்து வாங்கிச் செல்லுங்கள் என வேறு தேதியை குறித்து கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனால் மக்கள் அதிருப்தியுடன் வீடுகளுக்குச் சென்றனர்.

அடுத்த செய்தி