ஆப்நகரம்

பஸ் பாஸ்... மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அரசு கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐக்களில் பயிலும் மாணவர்கள் தங்களின் பழைய பஸ் பாஸ்களை கொண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை பேருந்துகளில் பயணிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக (எம்டிசி) நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 30 Dec 2020, 1:05 pm
மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் தொடர்பாக, எம்டிசி மேலாண் இயக்குநர் இளங்கோ, அனைத்து கிளை மேலாளர்கள், நடத்துநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
Samayam Tamil கோப்பு படம்
மாணவர்களுக்கான பஸ் பாஸ்... எம்டிசி முக்கிய அறிவிப்பு


அதில், " கொரோனா பொதுமுடக்க தளர்வுகளை அடுத்து, தமிழகத்தில் அரசு கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், ஐடிஐ பயிற்சி நிலையங்கள் ஆகியவை கடந்த 7 ஆம் தேதி முதல் (டிசம்பர் 7) மீண்டும் இயங்கி வருகின்றன.

இருப்பினும், அரசு கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், ஐடிஐக்களில் படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆகியோருக்கு புதிய பஸ் பாஸ் வழங்க போதிய அவகாசம் இல்லை.

2,500 ரூபாய் பொங்கல் பரிசு...கோர்ட்டுக்கு போவோம்னு மிரட்டும் திமுக!

இதன் காரணமாக, கடந்தாண்டு பஸ் பாஸை காட்டி, இம்மாத இறுதி வரை (டிசம்பர் 31) எம்டிசி பஸ்களில் மாணவர்கள் பயணிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதேபோல், முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்களின் கல்லூரி அடையாள அட்டை அல்லது சீருடையை காட்டி பயணிக்கலாம்" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி