ஆப்நகரம்

பணமோசடி வழக்கு: அமைச்சருக்கு முன்ஜாமீன்...எம்டிசி எம்.டி.க்கு ஜெயில்!

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் பண மோசடி செய்தது தொடர்பான வழக்கில், சென்னை மாநகர போக்குவரத்து கழக (எம்டிசி) நிர்வாக இயக்குநர்(எம்டி) கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 12 Nov 2020, 8:20 pm
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அருள்மொழி என்பவர் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Samayam Tamil எம்டிசி எம்டி கைது
பண மோசடி வழக்கில் எம்டிசி எம்டி கைது


அதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கையையும் போலீஸார் மேற்கொண்டனர். ஆனால், செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சென்னை மந்தைவெளி, கரூர் ஆகிய இடங்களில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடுகளில சில மாதங்களுக்கு முன் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

தாய், தந்தை, மகன் என மொத்த குடும்பமும் படுகொலை - இது சென்னை பயங்கரம்!

இதனிடையே, இந்த வழக்குத் தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் கணேசனிடமும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கணேசனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்றிரவு கைது செய்தனர். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வரும் 25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி