ஆப்நகரம்

MTC Buses: சிட்டிசன்களுக்கு எம்.டி.சி.யின் தீபாவளி ஹேப்பி நியூஸ்!

தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் வணிக வளாகங்களுக்கு சென்றுவர வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) தெரிவித்துள்ளது.

Samayam Tamil 25 Oct 2020, 10:07 pm
தீபாவளி பண்டிகை நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக் எம்டிசி மேலாண் இயக்குநர் கணேசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil எம்டிசி
சென்னை மாநகர பேருந்துகள்


அதில், "இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை வரும் 14.11.2020 அன்று கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை வாழ் மக்கள் தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வணிக வளாகங்களுக்குச் சென்று பொருட்களை வாங்கிட ஏதுவாக எம்.டி.சி. சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

வார இறுதி நாட்களான (சனி & ஞாயிறு) 24.10.2020 முதல் 26.10.2020 வரை, 31.10.2020 & 01.11.2020 மற்றும் 07.11.2020 & 08.11.2020 உள்ளிட்ட ஏழு நாட்களுக்கும் மாநகர் போக்குவரத்துக் கழகம் இந்தப் பேருந்துகளை இயக்க உள்ளது.

கொரோனா இருந்தால் என்ன? -மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!

25 வழித்தடங்களில், 50 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் அட்டவணையில் உள்ளவாறு இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இப்பேருந்துகளை எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக பேருந்தின் முகப்பில் "Deepavali Shopping Special" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி