ஆப்நகரம்

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க சென்னையில் புதிய நடைமுறை!

வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க சென்னை போலீசார் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்

Samayam Tamil 20 Aug 2020, 5:19 pm
வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் லஞ்சம் பெறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், அபராதத் தொகையை டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் நடைமுறையை முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அமல்படுத்தினார்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இருப்பினும், வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. சிலர் வாகன விதிமுறைகளை மீறுவதோடு மட்டுமல்லாமல், தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி போலீசாரை மிரட்டியும் வருகின்றனர்.

அதேபோல், போலீசாரும் வாகன ஒட்டிகளை ஒருமையில் பேசுவது, அனைத்து விதமான ஆவணங்களை வைத்திருந்தாலும் ஏதோ காரணத்தை சொல்லி அபராதம் அல்லது லஞ்சம் வசூலிப்பது, தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டுவது என தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர்.

ஒரேநாளில் இத்தனை கோடியா? ஆச்சரியப்பட வைத்த சென்னை டாஸ்மாக் வசூல்!

இந்த நிலையில், வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அபராதம் விதிக்கும் முறையில் புதிய மாற்றத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அமல்படுத்தியுள்ளார்.

போலீசார் அறிவிப்பு


இதுகுறித்து திருவல்லிக்கேனி போக்குவரத்து துணை ஆணையர் புருஷோத்தமன் கூறுகையில், சென்னையில் தடை விதிக்கப்பட்ட இடங்களில் (நோ பார்க்கிங்) சிலர் அடாவடியாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அவ்வாறு விதி மீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ரசீதுகளை ஒட்டி செல்வார்கள். இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவது தடுக்கப்படும் என்றார்.

அடுத்த செய்தி