ஆப்நகரம்

ஊரடங்கு நிச்சயம் கிடையாது: தலைமை தேர்தல் அதிகாரி சூசகம்!

திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் ஊரடங்கு கொண்டு வருவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்றும் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Mar 2021, 3:00 pm
மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் தேர்தல் தொடர்பாக சில விளக்கங்களை அளித்தார். “பிரதமர் உடனான கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை” என்பதையும் செய்தியாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
Samayam Tamil ஊரடங்கு நிச்சயமாக கிடையாது: தலைமை தேர்தல் அதிகாரி சூசகம்!


அவர் அளித்த தகவலின்படி, “தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்ஃபிரென்சிங் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச்செயலாளர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்” என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த சாகு, “நத்தம் விசுவநாதன் வாக்காளர்க்குப் பணம் கொடுத்தது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அறிக்கை கேட்டிருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிகார் மாநிலத்தில் தேர்தல் நடத்தும்போது 12 ஆயிரம் பேர் கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். அதுபோல் சுகாதாரத் துறை தெரிவிப்பது பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கொரோனா 2ஆம் அலை உண்மையா: அரசு சொன்ன பதில் இதுதான்!

இதையடுத்து செய்தியாளர்கள், “கொரோனா பரவும் சூழலில் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வருவோர் மாஸ்க் அணிவதில்லை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை, அதனால்தான் கொரோனா பரவல் அதிகம் இருப்பதாகச் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்?” எனக் கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு, “தேர்தல் ஆணையம் ஒரு சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதற்கேற்றவாறு சுகாதாரத்துறை செயல்படும். இருந்தபோதிலும் தமிழக அரசுதான் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என சாகு தெரிவித்தார்.

அடுத்த செய்தி