ஆப்நகரம்

ஃப்ரீன்னா இப்படிதானா? -சாப்பாடு இல்லைன்னு சொன்ன அம்மா உணவகங்கள்...பசியோடு திரும்பிய மக்கள்!!

சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் பலவற்றில் இன்று மதியம் 1:30 மணிக்கே சாப்பாடு இல்லை என சொல்லப்பட்டதால், பசியுடன் வந்த பொதுமக்கள் மிகுந்த மனவேதனையுடன் திரும்பி சென்றனர்.

Samayam Tamil 5 Jul 2020, 5:07 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகள், கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள இந்த பொதுமுடக்கத்தில் முக்கிய அம்சமாக, ஜூலை 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil amma canteen


இதன் காரணமாக, முழு பொதுமுடக்கத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னை உள்பட மாநிலம் முழுவதும் உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிப்படக்கூடாது என்பதால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களிலும் இன்றும் இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படியே, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களி்ல் மூன்று வேளையும் வாடிக்கையாளர்களுக்கு இன்று இலவச உணவு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த உணவகங்களில் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாப்பாடு வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தளர்வுகள் அறிவிப்பு- 6ஆம் தேதிக்குப்பின் என்னென்ன இயங்கலாம்?

இந்த அறிவிப்புக்கு மாறாக, சென்னையில் உள்ள பல அம்மா உணவகங்களில் இன்று மதியம் 1.30 -1.45 மணிக்கே, மதிய உணவு இல்லை; சாப்பாடு தீர்ந்துவிட்டது என்று பணியாளர்கள் கூறியதால், பசியுடன் வந்த நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள், மிகுந்த மனவருத்தத்துடனும், வேதனையுடனும் வீடு திரும்பினர்.

"மாலை 3 மணி வரை மதிய உணவு வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் பசியுடன்வரும் எங்களிடம் சாப்பாடு இல்லை என்று அம்மா உணவக பணியாளர்கள் கொஞ்சமும் குற்றவுணர்வு இல்லாமல் கூறுகின்றனர்.

ஹோம் கொரன்டைனில் வெளியே சுற்றுபவர்களுக்கு ஆப்பு வைத்த புதிய ஆப் : சென்னை மாநகராட்சி அதிரடி!!

முழு முடக்கம் காரணமாக, மாநகர் முழுவதும் உணகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், அம்மா உணவகங்களில் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் வரும் என்று இவர்களுக்கு தெரியாதா?, இதுதான் இவர்கள் இலவசமாக உணவு அளிக்கும் லட்சணமா?" என்று பொதுமக்கள் தங்களின் மனவேதனையை கொட்டி தீர்த்தனர்.

இதுகுறித்து, மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் பணியாளர் கூறும்போது," இன்னைக்கு ஃப்ரீயா உணவு வழங்குகிறோம். வழக்கம்போல 12 மணிக்கு மதிய உணவை விநியோகிக்க தொடங்கினோம். முழு லாக்டவுன் என்பதால் ஒன்றரை மணி நேரத்திலேயே உணவு காலியாகிவிட்டது. நாங்கள் என்ன செய்ய முடியும்" என்று படுகேஷுவலாக விளக்கம் அளித்தார்.

அடுத்த செய்தி