ஆப்நகரம்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடா? சுகாதாரத்துறை விளக்கம்

இது குறித்து வந்த புகாரின் பேரில் ஓர் ஆய்வு குழு அமைத்து விசாரணை முடியும் நிலையில் உள்ளது எனவும் கூறினார்.

Samayam Tamil 27 Oct 2018, 12:48 pm
தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil image_710x400xt


சென்னை கிண்டியில் நடைபெற்ற நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த சர்வதேச கருத்தரங்கத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் நடைபெறும் உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் முறைகேடு ஏதும் இல்லை” என்றார். இது குறித்து வந்த புகாரின் பேரில் ஓர் ஆய்வு குழு அமைத்து விசாரணை முடியும் நிலையில் உள்ளது எனவும் கூறினார்.

தானமாகப் பெறப்படும் உறுப்புகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது பற்றிக் குறிப்பிட்ட அவ், “15 வகையான உறுப்புகள் தானாகப் பெறப்படுகின்றன. அவை தமிழ்நாட்டிலோ பிற மாநிலங்களிலோ எந்த நோயாளிகளுக்கும் பயன்படாதபோது மட்டுமே அவை வெளிநாட்டினருக்கு வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு ஸ்டிராய்டு ஊசி போடுவதாக வந்த தகவல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஸ்டிராய்டு ஊசி பயன்படுத்தாமல் இருக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும், காய்ச்சல் வரும்போது தாங்களாக மருந்துக் கடைகளில் மருந்துகளை வாங்கி பயன்படுத்தக் கூடாது எனவும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

அடுத்த செய்தி