ஆப்நகரம்

வயது ஒரு தடையில்லை - இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்த சென்னை மருத்துவர்கள்!

முதியவர் ஒருவருக்கு இதய வால்வு மாற்ற அறுவை சிகிச்சை செய்து, சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

TIMESOFINDIA.COM 24 Apr 2019, 9:42 pm
ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவர் பி.சத்யபாலன்(82), கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி இதய வால்வு மாற்ற அறுவை சிகிச்சைக்காக ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது சிகிச்சை நல்லபடியாக முடியும் என்று முதியவருக்கு மருத்துவர்கள் உறுதியளித்தனர்.
Samayam Tamil Apollo Hospital Surgery


அவ்வாறு நடந்தால், அடுத்த நாள் வாக்களிக்கும் மையத்திற்கு ஓட்டுப் போட அழைத்துச் செல்வதாக கூறினர். இன்று சத்யபாலன் வாக்களித்து ஒரு வாரம் ஆகியுள்ளது. தற்போது தனது விரலில் உள்ள மையை, பெருமையாக மீடியாக்கள் முன்பு காண்பிக்கும் அளவிற்கு நலமுடன் இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது வாழ்விற்கு கூடுதலாக ஆண்டுகளை மட்டும் மருத்துவர்கள் சேர்க்கவில்லை. நான் வாழும் நாட்களுக்கு வாழ்க்கை அளித்துள்ளனர். நான் சுயமாக பல்வேறு வேலைகளை செய்ய முடிகிறது.

அறுவை சிகிச்சைக்கு பின்பு, எனது வாக்களிக்கும் உரிமையை வெற்றிகரமாக நிறைவேற்றினேன் என்று கூறினார். மேலும் கூறுகையில், வேறு ஒரு மருத்துவமனைக்கு நான் செல்கையில் எனது வால்வு 10 ஆண்டுகள் மட்டுமே செயல்படும் என்று கூறினர்.

நீண்ட காலம் வாழ வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவரக்ள் வால்வு மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினர். அதற்காக மீண்டும் அதே மருத்துவமனையை அணுகினால், வயது மூப்பை காரணம் காட்டி அறுவை சிகிச்சை செய்ய மறுத்தனர்.

அதன்பிறகு அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அவர்கள் வெற்றிகரமாக இதய வால்வு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது நான் நலமுடன் இருக்கிறேன் என்றார்.

அடுத்த செய்தி