ஆப்நகரம்

45 ரூபாய்க்கு பெரிய வெங்காய விற்பனை : அரசு நடவடிக்கை

பண்ணைப் பசுமைக் காய்கனி விற்பனை மையங்களில் ரூபாய் 45க்கு பெரிய வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Oct 2020, 11:35 am
பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து இன்று 100ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது. இந்நிலையில், இதுகுறித்து இன்று ஆலோசனை மேற்கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் இதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாஎர்.
Samayam Tamil செல்லூர் ராஜு


அதன்படி, பண்ணைப் பசுமைக் காய்கனி விற்பனை மையங்களில் ரூபாய் 45க்கு பெரிய வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே தமிழகத்தில் மழைக் காலங்களின்போது வெங்காயம் வரத்துக் குறையும். அதன் விளைவாக வெங்காயம் விலை உயர்வது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு நடந்த விலை உயர்வு வெங்காயத்தை எகிப்திலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டிய அளவுக்கு மோசமாக ஆனது.

காய்கறி விலை: சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

இந்நிலையில், இந்த ஆண்டு விலை உயர்வு தொடங்கும் சமயத்திலேயே இதற்கான முடிவை ஆலோசித்து வருகிறார் கூட்டுறவுத்துறை அமைச்சர் என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி