ஆப்நகரம்

ஜாமீனில் வெளி வந்த ரவுடி தற்கொலை

அதிமுக பிரமுகரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நபர், ஜாமீனில் வெளியாகி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 5 Feb 2017, 10:01 am
சென்னை: அதிமுக பிரமுகரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நபர், ஜாமீனில் வெளியாகி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil out on bail man hangs to death
ஜாமீனில் வெளி வந்த ரவுடி தற்கொலை


புழல் அருகே திருவீதியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த துரை(28), எனும் ரவுடி கடந்த 4 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த சனிக்கிழமை காலை 11 மணியளவில் ஜாமீனில் வெளியானர்.

சிறையில் இருந்து வெளியே வந்த துரை தனது சகோதரர் இருதயராஜின் வீட்டிற்குச் சென்றுள்ளார். மதியம் உணவு அருந்திவிட்டு ஒரு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்ட துரை, அசதியில் உறங்குவதாக அவரது குடும்பத்தினர் எண்ணியுள்ளனர். இந்நிலையில், பிற்பகல் 3 மணியளவில் இருதயராஜ் அந்த அறையின் கதவை திறந்தபோது, துரை தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதைத் தொடர்ந்து, இருதயராஜ் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, துரையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிமுக பிரமுகர் சி.டி.ராஜன் கொலை வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

A 28-year-old rowdy, who was arrested for murdering an AIADMK worker, committed suicide after he came out on bail on Saturday. Durai, 28, was in prison for almost four months, before he got his bail and was released on Saturday.

அடுத்த செய்தி