ஆப்நகரம்

பரபரப்பை கூட்டிய சட்டவிரோத மதுவிற்பனை; சாலை மறியலால் தவித்த சென்னை!

மதுவிற்பனை செய்த விவகாரத்தை அடுத்து, சென்னையில் நடைபெற்ற திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 20 Apr 2019, 9:05 pm
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய குடித்து உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக, அரசே மதுவிற்பனை செய்ய முடிவு செய்தது. அதன்படி ஊர்கள் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து நடத்தி வருகிறது.
Samayam Tamil Chennai Strike


அதிலும் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடக்கும் செயல்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டதால், அதனை அகற்றக்கோரி போராட்டங்களும் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சென்னை தண்டையார் பேட்டையில் குடியிருப்பு பகுதியில் மதுவிற்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் மது விற்பவர்களுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும், அப்பாவி மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதற்காக கிராஸ் ரோடு பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அடுத்த செய்தி