ஆப்நகரம்

ஊரடங்கிலும் மாற்றுத்திறனாளிகள் மாஸாக நடத்தும் உணவகம்!

கொரோனா நெருக்கடிக்கு இடையே சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் புதிய உணவகம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 14 Jul 2020, 12:11 am
சென்னையில் ஐந்து மாற்றுத்திறனாளி நண்பர்கள் இணைந்து புதிய உணவகம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இவர்களில் ஒருவரான ரத்தினம் என்பவர், கொரோனா தாக்கத்திற்கு முன் பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சி அளித்து வந்துள்ளார். ஆனால் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அனைத்து விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளுக்கும் அரசு தடை விதித்ததால் அவரது வருமானம் பாதிக்கப்பட்டது.
Samayam Tamil மாற்றுத்திறனாளிகள் நடத்தும் உணவகம்


இதைத்தொடர்ந்து அவர் தற்போது சென்னையில் புதிய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் பணிபுரியும் அனைவருமே மாற்றுத்திறனாளிகளே. இந்த உணவகத்தை அமைப்பதற்கு வாய்ஸ் ஃபார் வாய்ஸ்லெஸ் தொண்டு நிறுவனம் ரத்தினத்திற்கு உதவிபுரிந்துள்ளது.

இதுகுறித்து ரத்தினம் பேசுகையில், “கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது எனது விளையாட்டு சான்றிதழ்களால் எனக்கு உதவமுடியவில்லை. ஆனால் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் ஐடி ஊழியர்கள் வரை அனைவரும் கொரோனா ஊரடங்கால் வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் நான் இந்த போராட்டத்தில் இருந்து மீள வேண்டுமென நினைத்தேன்” என்று கூறினார்.

உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது கூடுதல் சிறப்பு. கொரோனாவால் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் இழந்தவர்கள் நம்பிக்கை இருந்தால் புதிய பாதையில் பயணிக்கலாம் என்பதை இவர்கள் உணர்த்தியிருக்கின்றனர்.

அடுத்த செய்தி