ஆப்நகரம்

பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை வாலிபர் கைது!

பூந்தமல்லி அருகே பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

Samayam Tamil 2 May 2019, 1:23 pm
சென்னை பூந்தமல்லி அருகே பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
Samayam Tamil பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை வாலிபர் கைது!
பாஸ்போர்ட் இல்லாமல் தங்கியிருந்த இலங்கை வாலிபர் கைது!


இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவினர் சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பூந்தமல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த 3 பேர் தங்கியிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய புலனாய்வு பிரிவினர், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், தானுகா ரோஷன் என்ற இலங்கை வாலிபர், பாஸ்போர்ட் இல்லாமல் அந்த குடியிருப்பில் ஓராண்டாக தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் தானுகா ரோஷன் மீது இலங்கையில் கொலை வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதும், பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகம் வந்து சுதர்சன் என்ற பெயரில் தங்கியுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழகம் வந்தது மற்றும் போலியான ஆவணங்களை தயாரித்தது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ், தானுகா மீது வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போலீசார், அவரை நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இலங்கை குண்டுவெடிப்பில் தானுகா ரோஷனுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி