ஆப்நகரம்

சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படம்... குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்!

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகஸ்ட் 2 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.

Samayam Tamil 24 Jul 2021, 7:33 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதியின் உருவப்படம்.
  • குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.
  • ஆகஸ்ட் 2 இல் விழா என்று சபாநாயகர் அப்பாவு தகவல்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கருணாநிதி உருவப்படம்
தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படும் திறக்கப்பட உள்ளது
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ளது. இது குறித்து சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, 'சட்டமன்ற நுாற்றாண்டு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடக்க உள்ளது. அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் சட்ட பேரவையில் திறக்கப்படும்.

மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவ படத்தை திறந்து வைக்கிறார்.

'சார்பட்டா' திமுக படமாம்... பா.ரஞ்சித்தை கண்டிக்கும் அதிமுக ஜெயக்குமார்!

இந்த விழாவில் தமிழக கவர்னர், முதலமைச்சர் கலந்து கொண்டு பேசுவர்' என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.

அடுத்த செய்தி