ஆப்நகரம்

கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு தனியார் பேருந்துகள் இயக்கம்

அரசு போக்குவரத்து தொழிலார்களி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, சென்னை கோயம் பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

TNN 15 May 2017, 2:23 am
சென்னை : அரசு போக்குவரத்து தொழிலார்களி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, சென்னை கோயம் பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூருக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil private bus run from cmbt to other district
கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு தனியார் பேருந்துகள் இயக்கம்


போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இன்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, திட்டமிட்டபடி இன்று(15.5.2017) முதல் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே, பல்வேறு பகுதிகளில் தற்போது வேலைநிறுத்தம் துவங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்தநிலையில் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகளுக்குப் பதிலாக வெளியூருக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.மேலும் தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகளை விர இரு மடங்கு கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.

private bus run from cmbt to other district

அடுத்த செய்தி