ஆப்நகரம்

சட்ட கல்லூரி மாணவியிடம் அத்து மீற முயன்ற ரயில்வே படை அதிகாரி... தாம்பரத்தில் தற்கொலை முயற்சி

சட்ட கல்லூரி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ரயில் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு

Samayam Tamil 3 Apr 2023, 8:26 pm
சென்னை தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்றிரவு 9.30 மணியளவில் 3ம் ஆண்டு படிக்கும் சட்டக் கல்லூரி மாணவி நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவியிடம் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் நாயக்(32) என்பவர் மதுபோதையில் ஆபாசமாக பேசி, தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் இருந்து லாவகமாக தப்பி தனது சீனியர் வழக்கறிஞர் திலீபன்(33), என்பவருக்கு தகவலை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil tambaram


வழக்கறிஞர் திலீபன் மற்றும் அவரது ஜூனியர் அமித் இருவரும் சென்று ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளரிடம் யார் என கேட்ட போது இரு தரப்பிற்கும் கைகலப்பு ஏற்பட்டது.

இதில் வழக்கறிஞருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பின்னர் போலீசார் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் நாயக்-ஐ தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இன்று காலை இது தொடர்பாக செய்தி வெளியான நிலையில் காலை 9 மணியளவில் ரயில்வே போலீசார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, சக போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றி உள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செல்போனில் வீடியோ எடுத்தவர்களையும் ரயில்வே காவலர்கள் தடுத்தி நிறுத்தி எச்சரித்தனர்.

பின்னர் மாணவியின் வழக்கறிஞர் காவல் நிலையம் வந்தார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரையும் அழைத்து வந்தனர். அப்போது, புகார் ஏதும் கொடுக்காமல் இரு தரப்பும் சமாதானமாக சென்று மேல் நடவடிக்கை வேண்டாம் என எழுதி கொடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் நாயக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ரயில்வே காவல் அதிகாரியே தனியாக இருந்த பெண்ணிடம் அத்து மீற முயன்ற சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. ஆனால், கடைசியில் இரு தரப்பும் சமாதானமாக போனது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி