ஆப்நகரம்

19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரயில்வே ஊழியர்கள்!

தரமணி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில், 19 வயது பெண்ணை ரயில்வே ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவ்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 7 Jan 2019, 3:35 pm
தரமணி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில்,19 வயது பெண்ணைரயில்வே ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த சம்பவ்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil download


தரமணி எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் மயிலாப்பூர்செல்லும் ரயிலுக்காக 19 வயது பெண், தனது நண்பருடன் சென்ற சனிக்கிழமைகாத்திருந்தார். அப்போது ரயில் ஊழியர்களானகிளர்க் லோகேஷ்வரன், லிப்ட் ஆப்பரேட்டர் லூக்காஸ் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் அவர்களிடத்தில் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது 19 வயது பெண்ணுடன் இருந்த நண்பர், பெற்றோரிடம்தகவல் தெரிவிக்கட்டுமா என்று கூறியதும்,அந்த மூன்று பேரும், அவர்களிடத்தில் உள்ள செல்போனை பிடுங்கி, அந்த பெண்ணுடன் இருந்த நண்பரைஒரு அறையில் அடைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மூவரும் அந்த பெண்ணை ரயில் நிலையத்தின் இரண்டாவது தளத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தனர். இந்த சம்பவத்தை பார்த்த பயணி சரவணன், அவர்களை தடுக்க முயற்சித்தபோது, பலமாக தாக்கப்பட்டார்.

உடனடியாக சரவணன் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்,சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லோகேஷ் மற்றும் லுகாஸை கைது செய்தனர். ஆனால் ஸ்ரீராம் அங்கியிருந்து தப்பிச்சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதுபோன்ற கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்24 தேதி வேளச்சேரி எம்டிஎஸ் ரயில் நிலையத்தில் ஒரு பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த நபரைசிஆர்பிஎப் கான்ஸ்டபிள் தடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி