ஆப்நகரம்

சென்னையில் பலத்த மழை : பல இடங்களில் மழைநீர் தேக்கம்

சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

Samayam Tamil 9 Jul 2017, 11:28 pm
சென்னை: சென்னையில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
Samayam Tamil rain in chennai
சென்னையில் பலத்த மழை : பல இடங்களில் மழைநீர் தேக்கம்


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் நிலவிவந்தது . கடந்த வாரம் கூட சில இடங்களில் 100டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. இந்தநிலையில் சென்னையிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது.

இந்தநிலையில் சென்னையில் இன்று இரவு ஏழு மணிக்கு பலத்த மழைபெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் , தி நகர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணா நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, அடையார், திருவான்மியூர், கிண்டி, சேப்பாக்கம், அண்ணா நகர், வட சென்னையின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனிடையே நுங்கபாக்கத்தில் பெய்த கனத்த மழையால் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் சென்னையின் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

அடுத்த செய்தி