ஆப்நகரம்

அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jul 2018, 6:34 pm
சென்னை: தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்


தென்மேற்கு பருவமழை காரணமாக, கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழகத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வால்பாறை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று நிருபர்களைச் சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன், “தமிழகத்தில் அதிகபட்சமாக, கோவைமாவட்டம் சின்னக்கல்லாரில் 17 செ.மீ. மழையும், வால்பாறையில் 15 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்கில் மிதமான மழை பெய்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த மழை தொடரும்,” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையைப் பொறுத்தவரையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி