ஆப்நகரம்

Tamil Nadu Weatherman: ’நின்னு அடிக்கும்’ - சென்னை மழை நிலவரம் குறித்து ’மெர்சல்’ டுவிட் போட்ட வெதர்மேன்!

சென்னையில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இது தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் டுவிட் போட்டுள்ளார்.

Samayam Tamil 18 Aug 2019, 10:35 am
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக சென்னை வெதர்மேன் தனது டுவிட்டர் பதிவில், சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
Samayam Tamil Chennai Rains


தொடர்ந்து இரண்டாவது நாளாக அரிதான காலை மழை பெய்து கொண்டிருக்கிறது. இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அதாவது, மேகங்கள் வேகமாக கலைந்து செல்லவில்லை. எனவே மழை நின்னு அடிக்கும்.

Also Read: ஊட்டியாக மாறியது சென்னை...பல மாவட்டங்களில் மழை!!

வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் மிக நல்ல மழை பெய்துள்ளது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பாண்டி ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.

Also Read: எழுச்சி கண்ட நீர்வரத்து; படிப்படியாக உச்சத்தை நெருங்கும் மேட்டூர் அணை!

நேற்று மாலை விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கன மழை வெளுத்து வாங்கி இருக்கிறது. அலங்கயத்தில் மிக மிக கன மழையாக 151 மி.மீ பதிவாகியுள்ளது.

Also Read: இங்கெல்லாம் இன்னைக்கு புரட்டி எடுக்கப் போகும் கன மழை- வானிலை மையம் எச்சரிக்கை!

ஜலகாம்பாறையில் உள்ள நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை தென் சென்னையில் நல்ல மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் தற்போது மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது.

நள்ளிரவு பொழுதில் கூடிய மேகங்கள் நகராமல் அப்படியே நிலை பெற்றுள்ளன. ஏலகிரி, ஆம்பூர், வாணியம்பாடியில் சூழ்ந்த மேகங்கள் கலைந்து செல்லாமல், வலு குறையாமல் காட்சி அளிக்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி