ஆப்நகரம்

சலூன் கடைக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்!

இரு மாதங்களுக்குப் பின் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் காலை முதலே கடைகளுக்கு சென்று வருகின்றனர்.

Samayam Tamil 1 Jun 2020, 9:18 am
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகின்றது. ஒவ்வொரு முறை பொது முடக்கம் நீட்டிக்கப்படும்போதும் சில துறைகளுக்கு, சில இடங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டே வந்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முயற்சித்தனர்.
Samayam Tamil salon shops and spa opened in chennai


ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனுமதியளிக்க மறுத்தது. சலூன் கடை தொழிலாளர்கள் அரசுக்கு கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக முதலில் கிராமப்புற பகுதிகளிலும் பின்னர் சென்னை தவிர்த்து பிற இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டிலேயே பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் சென்னையில் மட்டும் சலூன் கடைகள் திறக்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. சென்னையில் பிற கடைகள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் சலூன் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இரு மாதங்களுக்குப் பின் தொடங்கிய பொது போக்குவரத்து!

இந்நிலையில் இன்று ஐந்தாம் கட்ட பொது முடக்கம் அமலுக்கு வரத் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 68 நாள்களுக்குப் பின் சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் காலை முதலே அங்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். 6 மணிக்கெல்லாம் பல கடைகளில் ஆள்கள் வரத் தொடங்கிவிட்டனர். இருப்பினும் ஒன்றிரண்டு நபர்களை மட்டும் காத்திருக்கவிட்டு மற்றவர்களை குறிப்பிட்ட நேரத்தில் வருமாறு கடை உரிமையாளர்கள் அனுப்பிவிடுகின்றனர்.

கொரோனா: எகிறும் பாதிப்பு, என்ன செய்யப்போகிறது தமிழகம்?

முகக் கவசம் இல்லாமல் வந்தால் கடைகளுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை.

அடுத்த செய்தி