ஆப்நகரம்

பிப்ரவரி 9ஆம் தேதி முதல்வர் ஆகிறாரா சசிகலா!?

பிப்ரவரி 9ஆம் தேதி முதல்வர் ஆகிறாரா சசிகலா!?

TOI Contributor 4 Feb 2017, 8:37 am
சென்னை : ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை (05.02.17) அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்ற சசிகலா, கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டினார். நாளை இரண்டாவது முறையாக கட்சியின் எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை சசிகலா நடத்த இருக்கிறார்.
Samayam Tamil sasikala going to sworn as tamilnadu cm on 9th february
பிப்ரவரி 9ஆம் தேதி முதல்வர் ஆகிறாரா சசிகலா!?


ஒரு வாரத்திற்கு முன்பு கூட்டம் நடைபெற்ற நிலையில் இப்போது மீண்டும் கூட்டுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 8 அல்லது 9ஆம் தேதி சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்த செய்தி