ஆப்நகரம்

பாதுகாப்பு வளையத்தின் கீழ் சென்னை! 20,000 காவலர்கள் குவிப்பு!!

பாதுகாப்பு வளையத்தின் கீழ் சென்னை! 20,000 காவலர்கள் குவிப்பு!!

TOI Contributor 14 Feb 2017, 8:27 am
சென்னை : சசிகலா தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil security tightened in chennai
பாதுகாப்பு வளையத்தின் கீழ் சென்னை! 20,000 காவலர்கள் குவிப்பு!!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அசாதாரண அரசியல் சூழல் நிலவுகிறது. அதிமுக கட்சி சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி என்று இரண்டாக பிரிந்துள்ளது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க சசிகலா முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிடுகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகரானது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 20,000 காவல்துறையினர் சென்னையில் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கூடும் இடங்களான மெரினா, வணிக வளாகங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் வீடு, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் வீடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி