ஆப்நகரம்

தாய், தந்தை, மகன் என மொத்த குடும்பமும் படுகொலை - இது சென்னை பயங்கரம்!

தாய், தந்தை, மகன் என்று ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Nov 2020, 8:45 am
சென்னை, சௌகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலித்சந்த் (74). இவர் தமது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் (40) ஆகியோருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
Samayam Tamil படுகொலை சம்பவம் -சென்னை

சென்னை சௌகார்பேட்டை - படுகொலை சம்பவம்



பேசின் பிரிட்ஜ் பகுதியில் வசித்துவரும் தலித்சந்தின் மகளான பிங்கி, அவ்வபோது தமது தாய் வீட்டு வந்துசெல்வது வழக்கம்.

ஆனால் நேற்றிரவு தமது தந்தையை காண வழக்கம்போல் வீட்டுக்கு வந்த பிங்கிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தமது தாய், தந்தை, சகோதரர் ஆகிய மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இறந்து கிடந்ததை கண்டு பிங்கி அதிர்ச்சியடைந்தார்.

17 தோட்டாக்களுடன் விமானப் பயணம் எதற்காக?: காங்கிரஸ்காரரிடம் விசாரணை!

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த யானைகவுனி போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களது மூன்று பேரின் உடம்பிலும் தோட்டாக்கள் பாய்ந்திருந்ததில் இருந்து அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது.

தலித்சந்த் தமது தம்பி மற்றும் அவரது மகன்களுடன் இணைந்து ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சொத்து தகராறு காரணமாக இந்த படுகொலை சம்பவம நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா முகக்கவத்தை இவங்க எதுக்கு யூஸ் பண்ணிருக்காங்க பாருங்க!

தலித்சந்தின் மகன ஷீத்தல் தமது குடும்பத்தை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார் என்பதும், ஷீத்தலின் மனைவி மற்றும் மகள்கள் மகாராஷ்டிர மாநிலம், புணேவில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி