ஆப்நகரம்

தட்டுப்பாட்டை போக்குமா ஆறு லட்சம் கோவிஷீட்டு தடுப்பூசிகள்?

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையடுத்து, புணேவில் இருந்து ஆறு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன.

Samayam Tamil 21 Apr 2021, 9:26 am

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.
  • கூடுதல் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை.
  • 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கோவிஷீல்டு தடுப்பூசி
தமிழகம் வந்துள்ள ஆறு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக திருச்சி, கரூர், விருதுநகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கூடுதலாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று ஆறு லட்சம் டோஸ் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகளை மத்திய அரசு அண்மையில் தமிழகத்துக்கு ஒதுக்கியது.

கொரோனா வந்தாலும் லீவு கிடையாதாம்... எம்டிசி ஊழியர்கள் அதிர்ச்சி!

இந்த தடுப்பூசி பாட்டில்கள், மகாராஷ்டிரா மாநிலம், புணேயில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

ஐம்பது பார்சல்களில் கொண்டு வரப்பட்ட இந்த தடுப்பூசிகள் கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு, சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு மருந்து கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி